இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 மே 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-05-26

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017/2018 மற்றும் 2018/2019 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட றக்னா ஆரக்ஷக லங்காவின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழினுட்ப முகாமைத்துவத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணகை்குழுவின் வருடாந்த அறிக்கை.
(x)    2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றச் சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2022 ஆம் ஆண்டுக்கான நீர் வழங்கல் மற்றுமு் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை   119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கை
(xiii)    2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 6,10,11,13,14,16 மற்றும் 31 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 117 ஆம் பிரிவின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2292/34 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி    -     இரண்டு மனுக்கள்         
(ii)    கௌரவ பியல் நிசாந்த த சில்வா                    
(iii)    கௌரவ டீ. பி. ஹேரத்
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், 2023 மே 24 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது தொிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபது (20) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக

(ii) சிறப்புரிமை

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2022 ஒக்டோபர் 21  ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம் 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சட்டத்தரணி இரான் விக்கிரமரத்ன அவர்களுக்கு “சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


அனுதாபப் பிரேரணைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான காலஞ்சென்ற கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1257 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூன் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom