2023 மே 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-05-25 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
B : கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
C : விலங்குகள் நலனுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை
(vi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் சுற்றுலா அமைச்சு மற்றும் தேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர் வழங்கல் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கபில அதுகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ குமார வெல்கம - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ உதயன கிரிந்திகொட
(iii) கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பகுதியளவில் பதிலளித்தார்.
சேவை நலன் பாராட்டுத் தீர்மானம்
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள திரு. வருண பண்டார தம்மிக்க தசநாயக்க அவர்களின் சேவையைப் பாராட்டும் பிரேரணையை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரும் கெளரவ பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவரும் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(v) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் காணப்படும் காணிகள் மற்றும் குளங்கள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மே 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






