2023 மே 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-05-24 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : புதிய பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும் நியமனம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX ஆம் பகுதியையும்;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXV மற்றும் XXXVI ஆம் பகுதிகளையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் XVII ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நியதிச்சட்ட நிறுவனங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உண்ணாட்டு மருத்துவக் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(v) 2020/2021 ஆம் ஆண்டுக்கான பீசீசீ லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறுபயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2019 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(x) 2021 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xi) 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(xii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiii) 2021 ஆம் ஆண்டுக்கான சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விசஸ் (பிறைவேட்) லிமிட்டட்டின் வருடாந்த அறிக்கை
(xiv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ விஜித பேருகொட
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ ஜகத் சமரவிக்ரம
வடமத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் தொலைபேசி அழைப்பின் மூலம் தன்னை அச்சுறுத்துதல்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் திரு. ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரட்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 123; எதிராக 77)
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
(ii) கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மே 25ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






