இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-06-23

சட்டமூலங்கள் சமர்ப்பணம் அம்புலுவாவ திசாநாயக முதியான்சேலாகே ஜயரத்ன மத நிலையம் மற்றும் உயிரியற் பன்வகைத்தொகுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அம்புலுவாவ திசாநாயக முதியான்சேலாகே ஜயரத்ன மத நிலையம் என அழைக்கப்படும் நம்பிக்கைப் பொறுப்பு நிலையமொன்றையும் உயிரியற் பன்வகைத்தொகுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஒன்றையும் தாபிப்பதற்கும்; அதன் குறிக்கோள்களையும் தத்துவங்களையும் குறித்துரைப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் பிரேரித்தார். சபையின் பிரதான அலுவல்கள் பாராளுமன்ற சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரி குழு, பற்றிய பிரேரணை கெளரவ மனோ விஜெயரத்ன அவர்களால் பிரேரிக்கப்பட்டு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது) சபையால் நிறைவேற்றப்பட்டது. சிஹல சரண பின் கெட்டய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'தாமத செலுத்தலுக்கான மின்சாரத் துண்டிப்புக் கட்டணம்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சுனில் ஹந்துனெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து,1217 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுன் 24 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom