இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி

திகதி : 2023-03-30

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான மறைந்த கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று (மார்ச் 30) பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று, பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோரும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ மைத்ரிபால சிறிசேன, பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகக் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு மேலதிகமாக, இராஜதந்திர அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட செயலாளர் குழு, பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள், பாராளுமன்றத்துடன் இணைந்த ஏனைய பணியாளர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

இன்று மு.ப 09.00 மணிக்கு மறைந்த கௌரவ ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்த போது, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, கௌரவ கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் ஆகியோர் முன்னிலையில் செல்ல பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற விசேட வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனையடுத்து, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் அறிக்கையையும் பதிவு செய்தனர். அதனையடுத்து பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திர அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் குழு மற்றும் செயலகத்தின் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த இணைந்துகொண்டனர்.

பூதவுடல் சபாநாயகர் உள்ளிட்டவர்களால் செங்கம்பளத்தின் ஊடாக எடுத்துச்செல்லப்பட்டு வாகனத்தில் வைக்கப்பட்ட பின்னர் நிகழ்வு நிறைவடைந்தது.

 

1 2

3 4

5 6

7 8

9 10

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom