இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-06-12

கெளரவ தோமஸ் தங்கத்துரை வில்லியம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது. (i) கௌரவ கே. சிவநேசன் (ii) கௌரவ கனகசபை பத்மநாதன் கெளரவ (திருமதி) நிரூபமா ராஜபக்ஷ அவர்களுக்கு "நியோமால் பெரேரா மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 49 முதல் 57 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் பிரேரிக்கப்பட்டன: (i) பிரேமதாச கேகொட மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (ii) சமோதா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (iii) கருணா சமாதி ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (iv) கண்டி ஸ்ரீ கல்யானோதய சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (v) சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (vi) எதிர்கால உலக ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (vii) தெஹிவளை, கவுதான இஸ்லாமிய கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (viii) கிராமிய ஊழியர்கள் மற்றும் இணைந்த கிராமிய வளங்கள் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (ix) லஸந்த அலகியவன்ன மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'வெளிநாடுகளில் இலங்கையர்களால் வைப்பிலிடப்படுகின்ற அந்நியச் செலாவணி' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சரண குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1300 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுன் 23 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom