சபை அலுவல்கள் |
திகதி : | 2009-06-09 |
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி
ஆயுதந்தாங்கிய படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையேயான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பாகவிருக்க வேண்டியவரும்; பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரியாகவிருக்க வேண்டியவருமான ஆளொருவரை நியமிப்பதற்கும் பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரியினது குழுவைத் தாபிப்பதற்கும்; ஏற்பாடு செய்வதற்கும்; பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரியின் பணிகளுக்காக ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.
தொழில் உறவுகள், மனிதவலு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:
ஊழியர் சகாய நிதிய (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
1975 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதிய (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
இந்தியக் குடிவரவு தொழிலாளர்(நீக்கம்)
(132 ஆம் அத்தியாயமான) இந்தியக் குடிவரவு தொழிலாளர் கட்டளைச் சட்டத்தை நீக்கஞ் செய்வதற்கானதொரு சட்டமூலம்
ஆலோசனைக் குழுக்களும் (சட்டவாக்க) நிலையியற் குழுக்களும்
(அ) கீழ்க்கண்டவாறு ஐம்பத்து ஐந்து (55) ஆலோசனைக்குழுக்கள் நியமிக்கப் படுமாக:-
1. மத அலுவல்கள், ஒழுக்க மேம்பாடு பற்றிய ஆலோசனைக்குழு.
2. பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய ஆலோச னைக்குழு.
3. நிதி, திட்டமிடல் பற்றிய ஆலோசனைக்குழு.
4. தேசத்தைக் கட்டியெழுப்புதல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
5. உள்ளக நிருவாகம் பற்றிய ஆலோசனைக்குழு.
6. பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய ஆலோசனைக்குழு.
7. நீதி, சட்டமறுசீரமைப்பு பற்றிய ஆலோசனைக்குழு.
8. சுகாதார நலத்துறை, போசணை பற்றிய ஆலோசனைக்குழு.
9. துறைமுகங்கள், விமான சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
10. பெற்றோலியம், பெற்றோலியவள அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
11. நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
12. கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
13. கல்வி பற்றிய ஆலோசனைக்குழு.
14. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு.
15. இளைஞர் வலுவூட்டுகை, சமூக பொருளாதார அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
16. தபால், தொலைத்தொடர்புகள் பற்றிய ஆலோசனைக்குழு.
17. நகர அபிவிருத்தி, புனித பகுதிகள் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
18. சமூக சேவைகள், சமூக நலனோம்புகை பற்றிய ஆலோசனைக்குழு.
19. வீடமைப்பு, பொதுவசதிகள் பற்றிய ஆலோசனைக்குழு.
20. சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு பற்றிய ஆலோசனைக்குழு.
21. நீர் வழங்கல், வடிகாலமைப்பு பற்றிய ஆலோசனைக்குழு.
22. விஞ்ஞான, தொழில்நுட்பவியல் பற்றிய ஆலோசனைக்குழு.
23. அரசியலமைப்பு அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு பற்றிய ஆலோசனைக் குழு.
24. மீள் குடியமர்த்துகை, அனர்த்த நிவாரண சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழு.
25. திட்டச் செயற்படுத்துகை பற்றிய ஆலோசனைக்குழு.
26. துணைப்பயிர் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
27. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு.
28. ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழு.
29. மின்வலு, சக்தி பற்றிய ஆலோசனைக்குழு.
30. சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டுகை பற்றிய ஆலோசனைக்குழு.
31. தொழில் முயற்சி அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக் குழு.
32. மக்கள் தோட்ட முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
33. காணி, காணி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
34. இளைஞர் அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு.
35. மக்கள் தொடர்பாடல், தகவல் பற்றிய ஆலோசனைக்குழு.
36. சுதேச மருத்துவத்துறை பற்றிய ஆலோசனைக்குழு.
37. தொழில் உறவுகள், மனிதவலு பற்றிய ஆலோசனைக்குழு.
38. விளையாட்டுத்துறை, பொதுப்பொழுதுபோக்கு பற்றிய ஆலோசனைக்குழு.
39. வர்த்தகம், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவுத்துறை, நுகர்வோர் சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
40. அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
41. நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
42. சுற்றுலாத்துறை பற்றிய ஆலோசனைக்குழு.
43. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை பற்றிய ஆலோசனைக்குழு.
44. வாழ்க்கைத்தொழில், தொழிற்பயிற்சி பற்றிய ஆலோசனைக்குழு.
45. கிராமியக்கைத்தொழில், சுயதொழில் ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக்குழு.
46. உள்ளூராட்சி, மாகாணசபைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
47. கடற்றொழில், நீரகவளமூலங்கள் பற்றிய ஆலோசனைக்குழு.
48. கால்நடைவள அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
49. வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு.
50. கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் பற்றிய ஆலோசனைக்குழு.
51. உயர்கல்வி பற்றிய ஆலோசனைக்குழு.
52. நீர்ப்பாசன, நீர்முகாமைத்துவம் பற்றிய ஆலோசனைக்குழு.
53. கைத்தொழில் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு.
54. போக்குவரத்து பற்றிய ஆலோசனைக்குழு.
55. சுற்றாடல், இயற்கைவளங்கள் பற்றிய ஆலோசனைக்குழு.
நிலையியற் கட்டளை 109 இன் பிரகாரம், அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அத்தகைய விடயங்களைப் பரிசீலித்து அறிக்கையிடுவதற்கு, ஒவ்வொரு குழுவும் ஐந்துக்குக் (5) குறையாத, முப்பத்தொன்றிற்கு (31) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்றாக (3) இருக்க வேண்டும் என்றும்;
(ஆ) முறையே "ஏ" நிலையியற்குழு மற்றும் "பீ" நிலையியற்குழு என்றழைக்கப்படும் இரண்டு (சட்டவாக்க) நிலையியற்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருப்பதோடு ஏதேனுமொரு குறித்த சட்டமூலமொன்று பரிசீலனைக்கு விடப்படுமிடத்து மேலதிகமாக பதினைந்து (15) உறுப்பினர்களுக்கும் விஞ்சாத எண்ணிக்கையினை ஒவ்வொரு குழுவுக்கும் நியமிப்பதற்கு சபாநாயகர் அதிகாரமளிக்கப் பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் ஏழு (7) ஆக இருக்க வேண்டும் என்றும் கெளரவ சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.
ஆலோசனைக்குழுக்கள்
இன்றைய தினம் பாராளு மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய ஆலோசனைக்குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் ஐந்து (5) பேருக்கு குறையாததும் முப்பத்திமூன்று (33) பேருக்கு விஞ்ஞாததுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டுமென பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
சபைக்குழு
நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாது, சபைக்குழு, சபாநாயகரைத் தவிசாளராகவும், தெரிவுக் குழுவால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) பேரை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
123 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரையும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) ஏனைய உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
124 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாலாசன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகியோரையும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) ஏனைய உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
125 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் அரசாங்க கணக்குக் குழுவானது தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்திமூன்று (33) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
126 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்திமூன்று (33) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
சிறப்புரிமைகள் பற்றிய குழு
127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பொது மனுக்கள் பற்றிய குழு
128 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பொதுமனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்திமூன்று (33) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
உயர் பதவிகள் பற்றிய குழு
128 (அ) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் உயர் பதவிகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பின்வரும் பாராளுமன்ற தெரிகுழுக்களின் காலத்தை 2009 டிசம்பர் 31ஆம் திகதி வரை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது;
கெளரவ துலீப் விஜேசேகர அவர்களுக்கு "இலங்கை சர்வதேச ஒத்துழைப்புச் சங்கத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 ஜுன் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 95 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் அதற்கு எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1622 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுன் 10 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
- கெளரவ நந்தமித்ர ஏக்கநாயக்க
- கெளரவ சந்திம வீரக்கொடி

- மனிதரால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளை விசாரணை செய்வதற்கும் அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்குமான தெரிகுழு
- தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான தெரிகுழு
- வேகமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களைப் பற்றி ஆராய்வதற்கான தெரிகுழு
கெளரவ துலீப் விஜேசேகர அவர்களுக்கு "இலங்கை சர்வதேச ஒத்துழைப்புச் சங்கத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 ஜுன் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 95 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் அதற்கு எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1622 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுன் 10 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்