இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-04-21

சட்டமூலங்கள் சமர்ப்பணம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தம்) வீதி அபிவிருத்தி அதிகாரசபையைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார். "எஸ். பீ. நாவின்ன மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்" இச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு கெளரவ விஜயதாஸ ராஜபக்ஷ் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1) முதல் (10) வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i) உள்ளூரதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மூன்றாம் மதிப்பீட்டின்போது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, 54 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.) (iii) உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை (iv) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (v) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (vi) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் (vii) இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 37, 38 ஆம் மற்றும் 40 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் பிரேரிக்கப்பட்டன: (i) பண்டாரகம விக்கிரமசீலா தர்மாதயன சமூகசேவைகள் மன்றத்தைக் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (ii) சமூக நிவாரண மன்றத்தைக் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (iii) விசேட தேவைப்பாடுகள் கொண்ட சிறுவர்களுக்கான கோசல தூல்லாவ மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலணைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 32 ஆம் இலக்க விடயமான மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்,- விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (ஒற்றோபர் 03, 2006) சபையின் அனுமதியுடன் கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை " 'கோல்டன் கீ கிரடிட் காட்' பிரச்சினையும் நிதிக் துறையின் நெருக்கடியும்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1625 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மே 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom