சபை அலுவல்கள் |
திகதி : | 2009-04-07 |
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்;
தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்)
செலுத்தத் தவறிய வரிகளை அறவிடுவதற்கான கால வரையறையிடப்பட்டதொரு முறையில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டதும் துரிதமானதுமானதொரு நடைமுறையொன்றுக்கு ஏற்பாடு செய்வதற்கும் செலுத்தத் தவறிய வரிகளை குறித்த சில சூழ்நிலைகளில் பதிவழிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலம்
நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம்
இலங்கை நிலவடிவமைப்புக் கலைஞர்கள் நிறுவகம்
இலங்கை நிலவடிவமைப்புக் கலைஞர்கள் நிறுவகத்தை தாபிப்பதற்கும், அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலத்தை நகர அபிவிருத்தி, புனித பகுதிகள் அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.
2008 நவம்பர் மாதம் 11 ஆம் மற்றும் 2008 ஒற்றோபர் மாதம் 22 ஆம் திகதிகளில் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பாலித ரங்கே பண்டார சிறப்புரிமை பிரேரணைகளின்போது எழுப்பிய விடயங்கள், கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 ஏப்ரல் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 81 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் அதற்கு எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
1635 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்