இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-02-18

சட்டமூலங்கள் சமர்ப்பணம் வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் சட்டமூலம் வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதார நியமங்கள் மீதான கொள்கையொன்றை வகுத்தமைப்பதற்காக வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகத்தைத் தாபிப்பதற்கும் தொழில்தருநர்கள் ஊழியர்கள் ஆகிய இருவரையும் பாதுகாப்பதற்காக எல்லா வேலையிடங்களிலும் வாழ்க்கைத்தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதார சூழலொன்றை உருவாக்குவதற்காகவும், அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார். இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) சபையால் நிறைவேற்றப்பட்டன. இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குவிதிகள் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை உபயோகித்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பேமசிறி மானகே அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2009 பெப்புருவரி 19 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை பாராளுமன்றம் 1524 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom