இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பிரதமரின் ‘தேசிய பேரவை’ தீர்மானம் எதிர்ப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

திகதி : 2022-09-21

பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் முன்மொழிந்த ‘தேசிய பேரவை’ அமைக்கும் தீர்மானம் எதிர்ப்பு இன்றி பாராளுமன்றத்தில் 20.09.2022ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில் ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் ‘தேசிய பேரவை’ அமைக்கப்படும். இது தொடர்பில் பிரதமர் தலைமையில் சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடனான மூன்று சுற்றுக் கலந்துரையாடல்கள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றிருந்ததுடன், இதில் இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

இந்தத் தீர்மானம் 20.09.2022 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தேசிய பேரவைக்குக் காணப்படும்  அதிகாரம் மற்றும் பொதுவான பொறுப்புக்கள் குறித்து பிரதமர் விளக்கமளித்தார்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதுல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது இதில் ஒன்றாகும்.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான அதிகுறைந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய உடன்பாட்டிற்கு வருவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய பேரவை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் அவதானிப்பாளர்கள் ஆகியோர் விசேட கூட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் இப்பேரவை மேற்கொள்ளும்.

தேசிய சபையானது துறைசார் மேற்பார்வவைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு, அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கைகளைக் கோருவதற்கான தத்துங்களைக் கொண்டிருக்கும்.

இதன் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்படவிருப்பதுடன், இதன் உறுப்பினர்களாகப் பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டவாறு இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முப்பந்தைந்துக்கும் (35) மேற்படாதோர் உறுப்பினர்களாகக் காணப்படுவர்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom