சபை அலுவல்கள் |
திகதி : | 2008-12-04 |
இன்றைய தினத்துக்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009)இன் இருபத்தோராவது ஒதுக்கப்பட்ட தினமாகும். "குழுநிலை விவாதம்" - (டிசம்பர் 3ஆம் திகதிய தொடர்ச்சி)
[வரவு செலவுத் திட்டம் 2009]
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 68ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2008 டிசம்பர் மாதம் 2ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப்படுத்திக்கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 14 வாக்குகள் அளிக்கப்பட்ட அதேவேளை அதற்கு ஆதரவாக 114 வாக்குககள் அளிக்கப்பட்டன.
குறைநிரப்புத் தொகை - தலைப்பு 103 - நிகழ்ச்சித்திட்டம் 1: (ரூபா 28,067,338,000) - பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பின்வரும் விடயங்களும் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
1. தாலியவக்க ஸ்ரீ ஆனந்த விஹாரை கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
2. எக்சத் ஜன இசுறு பதனம (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
3. வண. மூனமலே தம்மரதன ஞாபகார்த்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
4. உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கைப் பிரதேச நிலையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
5. ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
6. மாதம்பே தனிவெல்ல மஹா தேவால நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
அதன் பின்னர் 1730 மணிக்கு, 2008 டிசம்பர் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்