இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை

திகதி : 2021-07-08

கௌரவ பசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் 09 வது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (08) உறுதியுரை எடுத்தார்.

அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட கிருவாபத்துவ கிராமத்தில் 1951 ஆம் ஆண்டில் பிறந்த பசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2007 செப்டம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக  பணியாற்றினார்.

அதனை அடுத்து 2010 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 425,861 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார். 07 வது பாராளுமன்றத்திலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் அவர் 2005 முதல் 2010 வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

பசில் ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு இசிபதன கல்லூரியினதும் கொழும்பு ஆனந்த கல்லூரியினதும் பழைய மாணவராவார்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom