இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-08-05

சட்டமூல சமர்ப்பணம்

"தேசிய புடைவை மற்றும் உடுதுணி நிறுவகம்" எனும் தலைப்பிலான சட்டமூலம்

தேசிய புடைவை மற்றும் உடுதுணி நிறுவகத்தைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; புடைவை மற்றும் ஆடைத்தொழிலின் அபிவிருத்திக்கும் நிலைபெறுதகு நன்மைக்கும் ஏற்பாடு செய்வதற்கும்; உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக புடைவை மற்றும் உடுதுணித் தொழல்நுட்பம், முகாமை மற்றும் அதனோடு தொடர்புபட்ட துறைகளில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் செயலமர்வுகளையும் நடாத்துவதற்கும்; வெளிநாடுகளுக்கான தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைச் சேவைகளை ஏற்பாடு செய்வதற்கும்; 1984 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, உடுதுணித் தொழிற்பயிற்சி நிறுவகச் சட்டம் மற்றும் 1984 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, புடைவைத் தொழிற்பயிற்சி, சேவைகள் நிலையச் சட்டத்தினை நீக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலத்தினை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.


சட்டமூலச் சமர்ப்பணம்

"லசந்த அலகியவன்ன மன்றம் (கூட்டிணைத்தல்)"

கெளரவ (சங்) கொடபொல அமரகீர்த்தி தேரருக்கு சட்டமூலத்தினை அறிமுகப்படுத்து வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

பின்வரம் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.:-

(i) கடல்கீழ்ப்புத் தடுப்புச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) காட்டுக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்புப் பிரேரணை

பூரண பொருளாதாரப் பங்கிண்மைக்கான உத்தேச இந்திய – இலங்கை உடன்படிக்கை (CEPA) பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ விமல் வீரவங்சவினால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பிறகு, 1658 மணியளவில் பாராளுமன்றம் 2008 ஆகஸ்ட் 6 ஆம் திகதி புதன் கிழமை காலை 9.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom