பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

திகதி : 2021-03-09

Print

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (slwpc.org) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (09) பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பர்னாந்துபுள்ளே அவர்களின் அழைப்பின் பேரில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் தலைமையில் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் பாராளுமன்றச் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதித்தலைவர்களான திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, டயனா கமகே, கோகிலா குணவர்தன, முதிதா பிரிஸான்தி, ராஜிகா விக்கிரமசிங்ஹ மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹனதீர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1