முன்னாள் சபாநாயகர் அமரர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவின் நினைவாக பாராளுமன்றத்தில் மத அனுஷ்டானம் |
திகதி : | 2021-02-23 |
|
மறைந்த முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவின் நினைவாக தர்ம போதனை மத அனுஷ்டானம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (22) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பம்பலப்பிட்டிய ஸ்ரீ வஜிராமாபதி, அபரபுர ஸ்ரீ தர்மாரக்ஷித மகா நிக்காய மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய அகமஹா பண்டித திருகோணமலை ஆனந்த தேரர் தர்ம போதனையை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகரின் குடும்ப உறுப்பினர்கள், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.