இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் நிலையியல் குழுக்கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்பு

திகதி : 2021-01-19

பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டின் (CSPOC) நிலையியல் குழுக்கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (18) ஒன்லைன் மூலம் கலந்துகொண்டார். ஆசியப் பிராந்திய பிரதிநிதியாக அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ சபாநாயகருடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களும் கலந்துகொண்டார். ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா/ நியூசிலாந்து, கனடா, கரீபியன், அட்லாண்டிக் மற்றும் அமெரிக்கா, பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் மத்திய தரைக்கடல், இந்தியா, பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய 9 பொதுநலவாய பிராந்தியங்களின் சபாநாயகர்கள் மற்றும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் ஒன்லைன் ஊடாக கலந்துகொண்டனர்.

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக நிலையியல் குழுவின் இந்தக் கூட்டம் ஒன்லைன் ஊடாக இடம்பெற்றது. பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் (CSPOC) 26 வது மாநாடு அவுஸ்திரேலிய, கன்பரா நகரில் 2022  ஜனவரியில் இடம்பெறும்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom