கௌரவ சபாநாயகருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு |
திகதி : | 2020-12-15 |
|
சீன மக்கள் குடியரசின் தூதுவர் திரு.ஷீ ஜன்ஹொங் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (15) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சபாநாயகர் தூதுவருக்கு தேனீர் விருந்துபசாரமொன்றை வழங்கினார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தஸநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.