கெளரவ ரஊப் ஹகீம் கெளரவ சபாநாயகரின் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்
i. உற்பத்தி வரி தொடர்பாக 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் கட்டளை
ii. வருமான வரி தொடர்பாக 2006ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 24ஈ(2)ஆம் பிரிவின் கீழ் கட்டளை
iii. வருமான வரி தொடர்பாக 2006ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 23(1)இ ஆம் பிரிவின் கீழ் கட்டளை
iv. வருமான வரி தொடர்பாக 2006ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 212இன் கீழ் கட்டளை
v. துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக 2002ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் கட்டளை
vi. முத்திரைக் கட்டணம் தொடர்பாக 2006ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் கட்டளை
vii. பொருளாதார சேவைக் கட்டணம் தொடர்பாக 2006 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பொருளாதாரச் சேவைக்கட்டணச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ் கட்டளை
viii. 1985ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1987ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறாக 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(3), 14 மற்றும் 20ஆம் பிரிவுகளின் கீழ் அரிசி ஏற்றுமதிக்காக குறைந்த விலையொன்றை விதிக்கும் ஒழுங்குவிதிகள்
ix. 2006ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க ஒதிக்கீட்டுச் சட்டத்தின் கீழ் ஏழு ஒழுங்குவிதிகள்
மேலே உள்ள எல்லா விடயங்களும் சபையினால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
"வடக்கு கிழக்கு பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக் கழக மாணவர்கள் அனுமதி" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ எட்வட் குணசேகர அவர்களால் பிரேரிக்கப்பட்டது.
அதன் பின்னர், பாராளுமன்றம் 1628 மணிக்கு 2008 ஜூலை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.