அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி |
திகதி : | 2020-12-08 |
2021ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (08) தீர்மானித்தது.
அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் விடயம் என்ன என்பது தொடர்பில் மீண்டும் ஒரு முறை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி முடிவெடுக்கும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய 18 ஆகக் காணப்படும் குறித்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிக்கப்படவிருப்பதுடன், ஆளும் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும், எதிர்க்கட்சியின் சார்பில் இரண்டு உறுப்பினர்களும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இக்கூட்டத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, அமைச்சர்களான விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக, மஹிந்த சமரசிங்க, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






