இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமாக குஷானி ரோஹணதீர அவர்கள் நியமனம்

திகதி : 2020-12-03

சட்டத்தரணி திருமதி. குஷானி ரோஹணதீர அவர்கள் பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களின் பரிந்துரைக்கு அமைய, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமாக  பணியாற்றிய நீல் இத்தவல அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி. குஷானி ரோஹணதீர அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி. ரோஹணதீர அவர்கள் 2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாக (நிர்வாகம்) பதவி வகித்ததுடன், 1999 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அதிகாரியாக இலங்கை பாராளுமன்ற சேவைக்கு இணைந்துகொண்டார்.

அம்பலாக்கொட தர்மாஷோக்க வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அதனை அடுத்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்த இவர் சட்டக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றி சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

 

dsg

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom