புதிய பொலிஸ்மா அதிபர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு |
திகதி : | 2020-12-02 |
புதிய பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள் இன்று (02) பிற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் கெளரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், இலங்கை காவல்துறையின் தேசிய பொறுப்பை நிறைவேற்ற புதிய பொலிஸ்மா அதிபர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, சபாநாயகர் அவர்கள் புதிய பொலிஸ்மா அதிபருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு இலங்கை பொலிஸ்துறையை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள் இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







