2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2020-11-12 |
2020 நிதி ஒதிக்கீட்டுச்சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் இன்று (12) நிறைவேற்றப்பட்டது.
கௌரவ பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இன்று முற்பகல் ஆரம்பித்துவைத்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் பல முன்வைக்கப்பட்டு 2020 நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேறியது.
2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 17ஆம் திகதி கௌரவ பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






