இன்றைய தின பிரதான சபை அலுவல்கள்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கீர்த்திமிக்க தவிசாளர் பதவிக்கு சுகாதார நலத்துறை, போசணை அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ நிமல் சிறிபால த சில்வா தெரிவுசெய்யப்பட்டமைக்காக, முழு பாராளுமன்றத்தின் சார்பிலும் கௌரவ தினேஷ் குணவர்தன தனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்தார்.
1959 ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்டவாறான (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2அம் பிரிவின் கீழ் சனாதிபதியவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2008 யூன் மாதம் 02ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டுமாக என பிரதம அமைச்சரும் உள்ளக நிருவாக அமைச்சரும், பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுக்கமும் பிரதி அமைச்சருமானவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் அவசரகாலத்தை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன் பின்பு, 2008 யூன் 6 ஆம் திகதி மு.ப. 09.30 மணி வரை, 17.40 மணிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.