புதுப்பிக்கப்பட்ட ஊடக நிலையத்தின் திறப்பு |
திகதி : | 2019-09-30 |
பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் வசதிக்காக புதுப்பிக்கப்பட்ட பாராளுமன்ற ஊடக நிலையம் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் 2019 செப்டெம்பர் 30ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நாடுகள் முகவர் நிறுவனம் (USAID) அமைப்பினால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட ஊடக நிலையமானது சகல வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சி மற்றும் வானொலி கலையகம், செவிப்புல மற்றும் வீடியோ கலவை, தொலைநகல் இயந்திரங்கள், அச்சுப்பொறிகள் மற்றும் இணையம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் குழுக் கூட்டங்களின் செய்திகளை தொகுக்கும் பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு தாம் இருக்கும் இடத்திலிருந்தே அந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ஊடக நிலையமானது இடைவெளியைக் குறைத்து, பாராளுமன்றத்தை நாட்டின் பொதுமக்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க, பாராளுமன்ற அலுவலர்கள், பத்திரிகை பதிப்பாசிரியர்கள், இலத்திரனியல் ஊடக தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற செய்தியாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










