‘Anura Bandaranaike – Legacy in the Legislature 1977-2008’ எனும் தலைப்பிலான வெளியீட்டின் பிரதியை கையளித்தல் |
திகதி : | 2019-09-24 |
‘அநுர பண்டாரநாயக்க – லெகஸி இன் த லெஜிஸ்லேசர் 1977-2008’ எனும் தலைப்பிலான வௌயீட்டின் பிரதியினை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களிடம் வெளியீட்டின் பதிப்பாசிரியர் ஜோர்ஜ் ஐ.எச். கூக் மற்றும் சர்வதேச கற்கைக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் 2019 செப்டெம்பர் 24 ஆம் திகதி கையளித்தனர். பாலுணர்வை நினைவுகூருதல் மற்றும் ஆற்றலின் பிரதிபலிக்கும் அம்மனிதரின் நினைவூட்டலாகும். பண்டாரநாயக்க அவர்களின் 70வது பிறந்த தின நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இவ்வெளியீடானது, இது அவரது புலமையின் நினைவுச்சின்னமாகவும் மேலும் அவர் கொண்டிருந்த திறனின் பிரதிபலிப்புமாகும்.
இந்த வெளியீடு மூன்று தசாப்தங்களாக சட்டமன்றத்தில் தனது மாறுபட்ட திறன்களில் அவர் ஆற்றிய முக்கிய உரைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு, அரசியலமைப்பு திருத்தங்கள், சிறப்பு சட்டமூலங்கள் மற்றும் அமைச்சின் வாக்குகள், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் அவரது காலத்தின் போது அனுதாபப் பிரேரணைகள் மீது அவர் ஆற்றிய உரைகளை பிரதிபலிக்கும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரது மரணத்தின் காரணமாக அவர் மீதான அனுதாபப் பிரேரணையின் போது அவரது நாடாளுமன்ற சகாக்கள் ஆற்றிய உரைகளும் இந்த வெளியீட்டில் உள்ளடங்கியுள்ளது.
மூன்று தசாப்தங்களாக நீடித்த தனது அரசியல் வாழ்வில் கௌரவ அநுர பண்டாரநாயக்க அவர்கள் நுவரெலியா-மஸ்கெலியா உறுப்பினராக 1977 இல் பாராளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டதுடன், இளைய எதிர்க்கட்சித் தலைவராகவும், 2000 முதல் 2001 வரை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் மட்டுமன்றி வெளிநாட்டலுவல்கள், உயர் கல்வி, சுற்றுலாத்துறை மற்றும் தேசிய மரபுரிமை போன்ற பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









