இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

குழந்தைகளுக்கான 3 ஆவது வருடாந்த தெற்காசியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் தளம்

திகதி : 2019-08-29

children-logoயுனிசெப் அமைப்புடன் உடன் இணைந்து 3 ஆவது தெற்காசியா பாராளுமன்ற கூட்டம் இலங்கையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கின்றது (3rd South Asia Parliamentarian Platform Meeting). செப்டம்பர் 2 ஆம் திகதி, சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் நாள் நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்வுகள், காலை 9.30 மணி தொடக்கம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள குழு அறை இல. 01 இல் நடைபெறவிருப்பதுடன் அதனைத் தொடர்ந்து அதன் நடவடிக்கைகள் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடக்கம் கொழும்பில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.

 

சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் 30 வது ஆண்டு நிறைவையும், இலங்கையில் உள்ள குழந்தைகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 5 வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில், தெற்காசியாவில் குழந்தைகளுக்கான முன்னேற்றத்தை முனைப்புறுத்தி, அவர்களின் தற்போதைய நிலைமை மற்றும் அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் அடைவதற்கான முக்கிய சவால்கள் உட்பட முடிக்கப்படாத நிகழ்ச்சி நிரலின் தற்போதைய நிலைமை தொடர்பில் இந்த ஆண்டின் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

 

[ பத்திரிகை அறிக்கை ]

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom