இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“BestWeb.lk 2019” போட்டியின் போது Parliament.lk க்கு இரண்டு தங்க விருதுகள்

திகதி : 2019-08-09

bestweb2019-logoLK ஆள்கள பதிவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த “BestWeb.lk” விருது வழங்கல் வைபவத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது (parliament.lk) யானது சிறந்த சிங்கள இணையத்தளம் மற்றும் சிறந்த தமிழ் இணையத்தள பிரிவுகளில் தங்க விருதுகளைப் பெற்றுக் கொண்டது. இவ்வைபவமானது, 2019 ஆகஸ்ட் 8ஆம் திகதி கொழும்பு, மெரினொ பீச் ஹோட்டலில் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் இணையத்தளமானது, அரச பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.

 

9வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வாண்டின் போட்டியில், வெற்றியாளர்களின் தேர்வானது பெற்றுக் கொண்ட வாக்குகள், இணைய நெரிசல் மற்றும் நடுவர்கள் குழுவின் புள்ளிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இணையத்தளங்களானது படைப்பாற்றல், வரைகலை மற்றும் வடிவமைப்பின் தரம், கலைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பயனருக்கான உள்ளடக்கத்தின் தரம் என்பவற்றைக் கொண்டு தீர்ப்பு செய்யப்பட்டன. 12 பிரிவுகளின் கீழ் 400 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இப்போட்டியில் பங்கேற்றியிருந்தன. விருதுகளானது, நான்கு விசேட பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டன. Parliament.lk யானது இதற்கு முன்னர் இப்போட்டியின் போது 2009, 2010, 2013, 2014, 2015, 2017 மற்றும் 2018 களில் வெற்றி பெற்றுள்ளது.

 

விருது வழங்கல் வைபவத்தின் போது போட்டியிட்டு வெற்றீயீட்டியோர்களுடன் பல புகழ்பெற்ற அதிதிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திரு. டி.சி. திஸாநாயக்க, பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

 1 2

 

புகைப்படங்கள்: BestWeb.lk பேஸ்புக் பக்கம்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom