மதிப்பீடு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கல் |
திகதி : | 2019-07-08 |
2018 ஆம் நிதி ஆண்டுக்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மேற்பார்வைக்கு உட்படும் நிறுவனங்களின் நிதி செயலாற்றுகை மதிப்பீடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள கணனி தகவல் முகாமைத்துவ முறைமையின் இரண்டாவது கட்டத்தை வெளியிட்டு வைத்தல் மற்றும் 2017 ஆம் நிதி ஆண்டுக்கான அதிக செயலாற்றுகைகளை காண்பித்த நிறுவனங்களை மதித்து கௌரவிக்கும் பொருட்டு ஒரு விருது வழங்கும் வைபவம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மேற்பார்வைக்கு உட்படும் சகல அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் கலந்து கொள்ளளுடன் 2019 ஜூலை 05 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பாராளுமன்ற எதிர்க் கட்சி முதற்கோலாசான் கௌரவ மஹிந்த அமரவீர மற்றும் இக்குழுவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2017 ஆம் நிதி ஆண்டுக்கான விசேட செயலாற்றுகைகளை காண்பித்த நிறுவனங்களின் 108 தலைவர்கள் இந்நிகழ்வின் போது விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்














