“இணைய நுழைவாயில் கையடக்க பயன்பாடு” பாராளுமன்றத்தினால் வெளீயீட்டு வைத்தல் |
திகதி : | 2019-04-17 |
இணைய நுழைவாயில் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையிலான கையடக்க பயன்பாடானது பாராளுமன்றத்தினால் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இது பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக திசாநாயக்க மற்றும் பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற செயலகத்தின் இணைய நுழைவாயிலான “iParliament” என அறியப்படுவதானது, இந்தப் பயன்பாட்டினை கட்டியெழுப்புவதற்கும் வசதியளிப்பதற்கும் உதவுகிறது. இந்தப் பயன்பாட்டின் ஊடாக செயலகத்தின் பணியாட்டொகுதியினருக்கு அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி உள் நுழைவதற்கும் தமது தனிப்பட்ட விபரங்கள், தின வருகை, ஊதியங்கள், விடுப்பு விபரங்கள், கடன்கள் போன்ற தகவல்களை பார்ப்பதற்கும் முடியும்.
இந்தப் பயன்பாடானது தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்கள பதவியணியினரால் வடிவமைக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









