இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு மல்வத்த மகா விகாரையினால் கௌரவ விருது

திகதி : 2019-03-21

thumbசபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு மல்வத்த மகாபீட மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்கசபையினரால் “விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தொடர்பான சான்றுப் பத்திர கையளிப்பானது மார்ச் 19ஆம் திகதி மல்வத்த மகாபீட திருவிடத்தில் இடம்பெற்றது.

 

இதற்கு முன்னர் இலங்கை ராமன்ய நிக்காயவினால் “விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன” கௌரவ விருதும், “சாரார்த தர்ஷி ஜனதா நாயக” கௌரவ விருதும் கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

 

யப்பான் பேரரசினால் வழங்கப்படுகின்ற யப்பானின் உயர் விருதான “Rising Sun” (உதய சூரியன்) விருதானது கடந்த வருடம் கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்தியாவினால் 2017ஆம் ஆண்டில் “விஷ்வ சாம” விருதும், அண்மையில் அப்துல் கலாம் விஞ்ஞான நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற “Pride Of Asia” (ஆசியாவின் பெருமை) விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

 

1 2

3 4

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom