பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் |
திகதி : | 2018-12-12 |
பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் எழுதுகருவிகள் வழங்கும் வைபவம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் ஆதரவுடனும் வருகையுடனும் 2018 டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 2017 ஆம் ஆண்டு இதன் ஆரம்ப வைபவம் நடைபெற்றதுடன் இது பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் நலனோம்புகை மற்றும் விசேட கருத்திட்டங்களுக்கான குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பிள்ளைகளுக்கு எழுதுகருவிகள், புத்தகங்கள், பாடசாலை பைகள், பாதணிகள் போன்றனவற்றுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டதுடன் தேசிய ரீதியிலான பரீட்சைகளில் திறமைகாட்டியோரை அவர்களது கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஊக்குவிப்பதற்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர்கள் நாயகம், திணைக்கள தலைவர்கள், பணியாட்டொகுதியினர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











