“ஈ-சுவாபிமானி 2018” விருதுகளில் பாராளுமன்ற கையடக்க பயன்பாட்டிற்கு வெற்றிகள் |
திகதி : | 2018-11-29 |
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையினால் (ICTA) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ‘ஈ-சுவாபிமானி டிஜிட்டல் சமூக தாக்க விருதுகள் - 2018’ இல் அரச மற்றும் குடிமக்கள் ஈடுபாடு பிரிவின் வெற்றியாளராக இலங்கை பாராளுமன்ற கையடக்க பயன்பாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வைபவம் 2018 நவம்பர் 29 அன்று கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. 8 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போட்டியில் பாராளுமன்ற கையடக்க பயன்பாடானது, வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முதல் 2016 இல் வெற்றி கொண்டது.
2009 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட ஈ-சுவாபிமானியானது, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையினால் சிறந்த டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கங்களை அங்கீகரிப்பதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஒன்றாகும். இது உலக உச்சி மாநாட்டு விருதை (WSA) ஒரு மைல்கல்லாக, தகவல் சமூகத்திற்கான உலக உச்சி மாநாடு (WSIS) மீதான ஐக்கிய நாடுகளின் வரம்பிற்குட்பட்டு செயல்படுத்தப்படலை வைத்து பணியாற்றுகின்றது. இவ்வருட போட்டியானது, ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கி நடாத்தப்பட்டதுடன் வெற்றியாளர்கள் பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்ட சிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய நடுவர்களின் மதிப்பீட்டின் பின்னர் தெரிவு செய்யப்படுவர்.
நடுவர்களின் மதிப்பீடானது இவ்வாறு கூறுகின்றது:
“கையடக்க ஊடுருவல் மற்றும் விரைவாக வேகத்தில் பயன்பாடுகளின் பாவனையை உணருகின்ற இலங்கையின் இக்காலத்தில், பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் அலுவலகங்கள் மற்றும் உறுப்பினர்களிடம் குடிமக்களை இணைப்பதன் மூலம் பொதுமக்களின் நலனுக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், இது சரியான நேரத்தில் மற்றும் முக்கிய ஆரம்பமொன்றாகும். இந்த பயன்பாட்டை நாட்டின் அனைத்து குடிமக்கள், தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது அலுவலகங்களுடன் நடுநிலையான மற்றும் சம வாய்ப்புடன் ஈடுபட முடியுமாகவுள்ளதால் நேரடி அணுகலானது அவர்களின் பிரச்சினைகள், கேள்விகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க உதவுகின்றது.
இப்பயன்பாடானது, பாராளுமன்ற நடவடிக்கைகளில் வீடியோ நேரலையினை வழங்குவதில் உதவுகிறது, நடத்தை மற்றும் முடிவுகளுக்கு வெளிப்படைத்தன்மைக்கு உதவுகிறது, பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் நடத்தை மற்றும் முடிவுகள் மூலம் பொதுமக்களுக்கு நடவடிக்கைமுறையின் புரிதலை அதிகப்படுத்துகிறது.
மும்மொழிகளிலும் உள்ள முதல் அரச கையடக்க பயன்பாடான இது, அனைத்து குடிமக்களுக்கும் மொழி தடையின்றி இணைந்து கொள்ள வாய்ப்பளிப்பதுடன் டிஜிட்டல் சமூக தாக்கத்தை உருவாக்கும் உண்மையான அர்த்தத்தில், நாட்டை வடிவமைக்கும் ஈடுபாட்டை ஊக்குவிக்கின்றது.”
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








