இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது

திகதி : 2018-11-23

பாராளுமன்றம் இன்றைய தினம் தெரிவுக் குழுவை (நி.க. 114) நியமித்தது. கௌரவ சபாநாயகர் அவர்களினால் இந்தக் குழுவில் சேவையாற்றுவதற்கான உறுப்பினர்களின் பெயர்களை பிரேரித்ததைத் தொடர்ந்து, அதற்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது (ஆதரவாக 121; எதிராக 0).

 

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் அமைப்புருவாக்கம், உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவற்றின் தொழிற்பாடுகள் மற்றும் கூட்டநடப்பெண் என்பவை பற்றி கவனத்திற் கொள்வதற்கும் அவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களை வசதியானவரை விரைவாகப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும் பின்வரும் குழுக்களில் சேவையாற்றுவதற்கு உறுப்பினர்களைப் பெயர்குறித்து நியமிப்பதற்கும் ஒவ்வோர் அமர்வுத்தொடரின் தொடக்கத்திலும் நியமிக்கப்பட்ட “தெரிவுக் குழு” எனப் பெயர் குறிக்கப்பட்ட குழுவொன்று இருத்தல் வேண்டும். அது சபாநாயகர் அவர்களை தவிசாளராகவும் மற்றும் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் நியமித்தர்களை உள்ளடக்கிய பன்னிரெண்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

 

குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:-

  • கௌரவ கரு ஜயசூரிய (தவிசாளர்)
  • கௌரவ தினேஷ் குணவர்தன
  • கௌரவ எஸ்.பீ. திசாநாயக்க
  • கௌரவ நிமல் சிறிபால த சில்வா
  • கௌரவ மஹிந்த சமரசிங்க
  • கௌரவ விமல் வீரவங்ச
  • கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
  • கௌரவ ரஊப் ஹகீம்
  • கௌரவ றிஸாட் பதியுதீன்
  • கௌரவ மனோ கணேசன்
  • கௌரவ பாட்டாளி சம்பிக ரணவக்க
  • கௌரவ மாவை சோ. சேனாதிராசா
  • கௌரவ விஜித ஹேரத்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom