பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் |
திகதி : | 2017-12-15 |
பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் மற்றும் எழுதுகருவிகள் வழங்கும் வைபவம் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் ஆதரவுடனும் வருகையுடனும் இன்று (டிசம்பர் 15) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இது பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் நலனோம்புகை மற்றும் விசேட கருத்திட்டங்களுக்கான குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் பிள்ளைகளுக்கு எழுதுகருவிகள், புத்தகங்கள், பாடசாலை பைகள், பாதணிகள் போன்றன வழங்கப்பட்டதுடன் தேசிய ரீதியிலான பரீட்சைகளில் திறமைகாட்டியோரை அவர்களது கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஊக்குவிப்பதற்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டுக்களில் திறமைகளை வெளிக்காட்டிய பணியாட்டொகுதி உறுப்பினர்களும் இவ்வைபவத்தின் போது பாராட்டப்பட்டனர்.
பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர்கள் நாயகம், திணைக்கள தலைவர்கள், பணியாட்டொகுதியினர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்













