பாராளுமன்ற பத்திரிகையாளர்களுக்கான இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம் |
திகதி : | 2017-07-18 |
USAID இன் வலுவூட்டல் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புக் கழக திட்டம் (SDGAP) உடன் இணைந்து, பாராளுமன்றத்தின் பத்திரிகையாளர்களுக்காக இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2017 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில், களுத்துறை அவானி ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு 43 ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ திலங்க சுமதிபால, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக்க, பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல, உதவிச் செயலாளர் நாயகம் திருவதி குசானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிக்கிரி ஜயதிலக, இலங்கைக்கான USAID இன் ஆளுநர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் திருவதி எலீனா டென்சீ ஆகியோருடன் பாராளுமன்ற செயலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் குழுவினரும் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.
முதலாவது திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தைப் போன்று இலங்கை பாராளுமன்ற அடிப்படை இயக்க கோட்பாடுகளுடன் தொடர்புபட்ட பரந்த பகுதிகள், பாராளுமன்ற பத்திரிகையாளர்களுக்கான சேவைகளும் உபகரணங்களும் மற்றும் பாராளுமன்ற அறிக்கையிடல் போன்றவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










