பாராளுமன்ற பத்திரிகையாளர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம் |
திகதி : | 2017-06-29 |
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையின் கீழ் மற்றும் USAID இன் வலுவூட்டல் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புக் கழக திட்டம் (SDGAP) உடன் இணைந்து, திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் பாராளுமன்றத்தின் பத்திரிகையாளர்களுக்கு முதல் முறையாக 2017 ஜூன் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், நீர்கொழும்பு ஹெரிடன்ஸ் இல் நடைபெற்றதில் 41 ஊடகவியலாளர்கள் பல்வேறு அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்கள் தலைமை தாங்கியதுடன் பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல, உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிக்கிரி ஜயதிலக மற்றும் இலங்கைக்கான USAID இன் ஆளுநர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருவதி டெனிஎல்லி ரீப் ஆகியோருடன் பாராளுமன்ற செயலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் குழுவினரும் கலந்து கொண்டனர்.
இலங்கை பாராளுமன்ற அடிப்படை இயக்க கோட்பாடுகளை உள்ளடக்கிய அமர்வுகள், பாராளுமன்ற பத்திரிகையாளர்களுக்கான சேவைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் பாராளுமன்ற அறிக்கையிடல் போன்றவை பாராளுமன்ற செயலகத்தின் அலுவலர்களினால் நடாத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முடிவில் கலந்துரையாடலான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களின் தேவைகளையும் பரிந்துரைகளையும் பற்றிய தகவலைத் தெரிவிப்பதற்கு கலந்துரையாடும் அமர்வொன்று நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் ஊடக மையத்தை பலப்படுத்த மற்றும் பாராளுமன்ற குழு அமர்வுகளை பொதுமக்களுக்கு திறக்க சபாநாயகர் எடுத்த முயற்சிகளை அவர்கள் வரவேற்றனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










