“ஆசிய -பசுபிக் பிராந்தியத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிராந்தியக் கூட்டத்தை” இலங்கைப் பாராளுமன்றம் நடத்தவுள்ளது |
திகதி : | 2017-04-20 |
ஆசியா -பசுபிக் பிராந்தியத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிராந்தியக் கூட்டம் 2017 ஏப்பிறல் 25 தொடக்கம் 26 ஆம் திகதி வரை இலங்கை, கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் இலங்கைப் பாராளுமன்றம் ஆகிவற்றால் கூட்டாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கூட்டம், “உள்ளடங்கலான மற்றும் அமைதியான சமூகங்களை முன்னேற்றுதல் மற்றும் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் என்பவற்றில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபங்கு” பற்றியதாக அமையும்.
ஆசிய–பசுபிக் பிராந்தியத்திலுள்ள முப்பத்தொன்பது (39) நாடுகளின் தேசியப் பாராளுமன்றங்களைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்புகள், வலையமைப்புகள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த அதானிப்பாளர்கள் ஆகியோரை இக்கூட்டம் ஒன்றிணைக்கும். இலங்கைப் பிரதிநிதிகள் குழு, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னைி (ஐ.ம.சு.மு.), மக்கள் விடுதலை முன்னைி (ம.வி.மு.) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க.) ஆகியவற்றைச் சேர்ந்த 20 இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
2017 ஏப்பிறல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க பிரதான உரை ஆற்றுவார். பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பா.உ., அங்குரார்ப்பண நிகழ்வில் வரவேற்புரை ஆற்றி நிகழ்வை சிறப்பிப்பார்.
அண்மைக் காலங்களில் பல அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த வன்முறைசார் தீவிரவாதத்தின் புதிய அலைகளை உலகம் கண்டுள்ளதால், மாநாட்டில் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் (PVE) மீது குறிப்பாக வலியுறுத்தல் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காகவும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை, விசேடமாக “நிலைபேறான அபிவிருத்திக்கு சமாதானமான மற்றும் உள்ளடக்கமான சமூகங்களை ஊக்குவித்தல், அனைவருக்கும் நீதியை அணுகும் வசதியை வழங்குதல், அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகத்தன்மை கொண்ட உள்ளடக்கமான நிறுவனங்களைக் கட்டியெழுப்புதல்” ஆகிவற்றை உள்ளடக்கிய இலக்கு – 16ஐ வெற்றிகரமாக அமுலாக்குவதற்காகவும் இளைஞர்களைத் முனைப்பான விதத்தில் ஈடுபடுத்துதல் கட்டாயமானதாகும்.
இதன் பிரகாரம், இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்தியக் கூட்டம் கொள்கை உருவாக்குநர்களுக்கிடையே வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தலைக் கையாள்வதற்கு இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அடையாளம் கண்டு அத்துடன் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக பாராளுமன்றங்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே தொடர்பாடலையும் ஒருங்கிணைப்பையும் எவ்வாறு அதிகரிக்கலாம் எனவும் முன்வமாழியும்.
கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கைப் பாராளுமன்றத்தினால் பங்குபற்றுனர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்டிக்கான (தலதா மாளிகை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம்) சுற்றுலாவொன்று இடம்பெறும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






