ஜெனீவாவிலுள்ள அனைத்துப் பாராளுமன்ற ஒன்றிய பேரவையில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய உரையாற்றல் |
திகதி : | 2016-11-01 |
ஜனீவாவில் 2016 ஒக்டோபர் 23-27 வரை நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் 135வது அமர்வில் இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்ற இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் 2016 ஒக்டோபர் 25 அன்று காலையில் பொது கலந்துரையாடலில் உரை நிகழ்த்தினார். இவ்வாண்டின் விவாதக் கருப்பொருளாக ‘முரண்பாட்டிற்கான முன்னோடிகளாக மனித உரிமை மீறல்கள்: ஆரம்ப பதிலளிப்போருக்காக பாராளுமன்றங்கள்’ அமைந்தது.
இலங்கை தூதுக்குழுவில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பா.உ., கௌரவ விஜித ஹேரத், பா.உ., கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன, பா.உ., கௌரவ வேலு குமார், பா.உ., மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி, தூதுவர் ரவினாத ஆர்யசிங்க, பிரதி வதிவிடப் பிரதிநிதி திருமதி சமந்தா ஜயசூரிய, மற்றும் ஆலோசகர் திருமதி சசிகா சோமரத்ன ஆகியோரும் தூதுக்குழுவுடன் இணைந்திருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








