பாராளுமன்ற அலுவலர்களுக்கான “தகவலுக்கான உரிமை சட்டம்” தொடர்பான கருத்தரங்கு |
திகதி : | 2016-08-18 |
பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாளர்களுக்காக “தகவலுக்கான உரிமை சட்டம்” தொடர்பான கருத்தரங்கு 2016 ஆகஸ்ட் 16 அன்று வாத்துவ, புளூ வோடர்ஸ் ஹோட்டலில் USAID நிதியளித்தலுடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தினால் நடாத்தப்பட்டது.
கீழ்வருவனவற்றை கலந்துரையாட வாய்ப்பு வழங்குவதன் மூலம் பாராளுமன்ற பணியாளர்களின் அறிவினை மேம்படுத்தி தகவலுக்கான உரிமை சட்டத்துடன் முன்னோக்கிச் செல்லதே இக்கருத்தரங்கின் குறிக்கோளாகும்.
- தகவலுக்கான உரிமை கொள்கைகள் மற்றும் தென் ஆசிய பிராந்திய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல்
- சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் அமுலாக்கத்தின் போதுள்ள சவால்கள்/ வாய்ப்புகள்
- தகவலுக்கான உரிமை சட்ட அமுலாக்கத்தின் போது அலுவலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலகத்தின் பங்கு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம்
இந்த கருத்தரங்கின் வளவாளர்களாக பின்வருவோர் செயற்பட்டனர்:-
- கௌரவ கருணாரத்ன பரணவிதான, பிரதி அமைச்சர், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
- கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர், கௌரவ பிரதம அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் மற்றும் தகவலுக்கான உரிமை சட்டமூல வரைவு குழுவின் தலைவர்
- திரு. தம்மிக திஸாநாயக்க, பாராளுமன்ற செயலாளர் நாயகம்
- திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும்
- திருமதி. குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்
- திரு. டிகிரி ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்
- திரு. நாலக குணவர்தன, கௌரவ செயலாளர், தகவலுக்கான உரிமை செயலணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
- திரு. சுனில் ஹெட்டிஆரச்சி, மேலதிகச் செயலாளர், அதிமேதகு சனாதிபதியின் அலுவலகம்
- கலாநிதி தினூசா சமரரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர், சட்ட பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
USAID அமைப்பின் அரச மற்றும் பாதிப்புறும் மக்களுக்கான இலங்கைக்கான அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் திருவதி. அலீனா டென்சி கலந்து சிறப்பித்ததோடு அவையில் உரையும் ஆற்றினார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்












