இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஐக்கிய அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர்களின் வருகை

திகதி : 2016-07-15

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர், திருமதி நிஷா பிஸ்வால் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2016 ஜூலை 13 அன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தது. இத்தூதுக்குழுவில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் திரு. டொம் மலினொஸ்கி அவர்களும் இணைந்திருந்தார்.

 

இத்தூதுக்குழுவானது பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதிச் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களை சந்தித்ததுடன், அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு உறுப்பினர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பகல்போசண விருந்துபசாரத்திலும் பங்கேற்றனர்.

 

1 2

3 4

5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom