இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாட்டொகுதியினருக்குமான அடியீடுமானிகள் பகிர்ந்தளிப்பு

திகதி : 2016-06-08

“ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை மேம்படுத்தல்” எனும் பயிற்சி பட்டறை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை நாட்டுக்கான காரியாலயம் ஆகியவற்றுடன் இணைந்து பாராளுமன்ற நிருவாக பணியாட்டொகுதி சங்கமானது (PASU) 2016 ஜூன் 8ஆம் திகதியன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியின் குழு அறை இல. 01 இல் ஒழுங்கு செய்திருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலக பணியாட்டொகுதியினர் மற்றும் ஏனைய பாராளுமன்ற பணியாட்கள் ஆகியோரின் சுகாதார நிலையினை மேம்படுத்துவதே இப்பயிற்சி பட்டறையின் பிரதான குறிக்கோளாகும். இந்நிகழ்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலக பணியாட்டொகுதியனருக்கு அடியீடுமானிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், சுகாதாரக் கல்வி செயலகத்தினால் தொகுக்கப்பட்ட “பாராளுமன்ற திரையிடல் முடிவுகள்” எனும் அறிக்கை, “பணியிட உணவக வழிகாட்டு நெறிகள்” மற்றும் “உணவுப்பட்டியலுக்கான வழிகாட்டி” என்பன கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் கௌரவ சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற பணியாட்டொகுதி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

1 2

3 4

5 6

7 8

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom