இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற பணியாட்டொகுதியினருக்கான “நல்லாட்சியினை நோக்கி” பயிற்சிப் பட்டறை

திகதி : 2016-03-04

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாளர்களுக்காக “நல்லாட்சியினை நோக்கி பாராளுமன்ற அலுவலர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம்” பற்றிய பயிற்சிப் பட்டறையொன்று USAID நிதியளித்தலுடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு வஸ்கடுவையில் அமைந்துள்ள ஸிட்ரஸ் ஹோட்டலில் 2016 மார்ச் 01 தொடக்கம் 03 வரை நடைபெற்றதுடன் சுமார் 150 செயலக பணியாட்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட இயற்றுபவர்களாக அவர்களது வகிபாகத்தில் பாராளுமன்ற பணியாளர்கள் செயல்திறன்மிக்க வகையில் உதவியளிப்பதற்கும் தமது செயலாற்றுகையினை மேம்படுத்துவதற்கும், பாராளுமன்ற பணியாளர்களை வலுப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் குறிக்கோளாகும். குழுவாக பணியாற்றுதல் மற்றும் குழுவினை கட்டியெழுப்புதல்; பாலினம் மற்றும் மகளிர் வலுவூட்டல்; ஆராய்ச்சி முறையியல்கள்; அத்துடன் குழு கட்டமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகள் போன்றன பற்றி பணியாளர்கள் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றினை இந்நிகழ்ச்சி வழங்கியது. பணியாளர்களின் அறிவினை மேம்படுத்துவதற்காக ஏனைய பாராளுமன்ற ஜனநாயகங்களிலிருந்து சில உதாரணங்களும் கலந்துரையாடப்பட்டன.

 

2015 ஒக்டோபர் மாதத்தில் குறுகிய கால கருத்திட்டம் ஆரம்பித்ததிலிருந்து இலங்கை பாராளுமன்ற கருத்திட்டத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட, USAID இனால் நிதியளிக்கப்பட்ட பயிற்சிப் பட்டறைத் தொடரின் நான்காவது பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும். பாராளுமன்றத்தின் தரத்தினை உயர்த்துவதற்கும், பணியாளர்களை விருத்தி செய்வதற்கும் இலங்கை பாராளுமன்றத்தின் முயற்சிகளில் இக்கருத்திட்டம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும். இந்நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய பா.உ., பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால பா.உ, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பா.உ., பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக திஸாநாயக்க, பிரதிச் செயலாளர் நாயகம் திரு. நீல் இத்தவல, உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிகிரி ஜயதிலக, USAID அமைப்பின் பதில் பணிப்பாளர் திரு. ரீட் ஒஸ்ச்லிமன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

1 2

3 4

5 6

7

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom