இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2012-06-22

2012, ஜூன் 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2012 ஜூலை மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி கலந்துரையாடி பின்வருமாறு உடன்பட்டது.

2012 ஜூலை 03 செவ்வாய்க்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்)

2012 ஜூலை 04 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்

(மேற்சொன்ன கட்டளைகள் 2012.06.19ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012.06.22ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 6(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2012 ஜூலை 05 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 புத்த சிராவக பிக்குப் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன சட்டமூலம் 2012.06.19ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2012 ஜூலை 06 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 03.30மறைந்த கௌரவ ஏ.எம்.டீ. ராஜன் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 03.30 - பி.ப. 06.30ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom