இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான திருத்தப்பட்ட சபை அலுவல்கள்

திகதி : 2018-03-20

2018, மார்ச் 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2018 மார்ச் 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 164, 175 மற்றும் 174ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது)

(இவ்விடயம் 2018.03.09ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 156ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2018 மார்ச் 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) தீவிரப் பொறுப்பு முகாமை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 165, 166 மற்றும் 157ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2018 மார்ச் 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 173 மற்றும் 163ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2018 மார்ச் 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2018.03.09 ஆம் திகதிய 245ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 167 முதல் 171 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom