மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2018-02-26 |
2018, பெப்ரவரி 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2018 மார்ச் 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம் (ii) முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம் (விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட விடயங்கள் தொடரப்படவுள்ளன) (iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயங்கள் 2018.02.21 ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 9, 10 மற்றும் 8ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iv) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2017.11.17ஆம் திகதிய 2045/56ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது 2018.02.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2018.02.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2018 மார்ச் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பான அறிக்கை - பரிசீலனை (iii) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு - அங்கீகரிப்பதற்கு (விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட விடயங்கள் தொடரப்படவுள்ளன) (இவ்விடயங்கள் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2018 மார்ச் 08 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) மதுவரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயங்கள் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) (iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளை (2017.12.19ஆம் திகதிய 2050/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது 2018.02.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2018.02.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8(4)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2018 மார்ச் 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உப தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர்களின் கொடுப்பனவுகளைத் திருத்தியமைத்தல் (iii) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துதல்) (இவ்விடயங்கள் 2018.02.21ஆம் திகதிய 240ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 18, 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






