இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒக்டோபர் 20ஆம் திகதிய மற்றும் இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2016-10-10

2016, ஒக்டோபர் 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஒக்டோபர் 20 வியாழக்கிழமை

மு.ப. 10.30 (2017) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (முதலாம் மதிப்பீடு)
 
 

2016 ஒக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.30 அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 

2016 ஒக்டோபர் 26 புதன்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன மூன்று சட்டமூலங்களும் 2016.10.06 ஆம் திகதிய 106ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3, 5 மற்றும் 6ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(iv) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2016 ஒக்டோபர் 04, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
 

2016 ஒக்டோபர் 27 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2ஆம் இலக்க விடயமாக 2016.10.06 ஆம் திகதிய 106ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2016 ஒக்டோபர் 28 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
   
  அனுதாபப் பிரேரணைகள்-
மு.ப. 11.30 - பி.ப. 12.30 மறைந்த கௌரவ ஜோர்ஜ் பெல்பொல
பி.ப. 01.30 - பி.ப. 06.30 (i) மறைந்த கௌரவ எஸ்.எல். குணசேகர
(ii) மறைந்த கௌரவ கே.என். சொக்ஸி

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom