இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2016-01-21

2016, ஜனவரி 19ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஜனவரி 26 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 2015.12.19 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் பன்னிரண்டு தீர்மானங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 

2016 ஜனவரி 27 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை
(2015 செப்டெம்பர் 22ஆம் திகதிய 1933/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(ii) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள்
(2015.09.17, 2015.09.22, 2015.10.01, 2015.10.09, 2015.10.28 மற்றும் 2015.11.20 ஆம் திகதிகளிலான முறையே 1932/54, 1933/18, 1934/32,1935/45, 1938/4 மற்றும் 1941/43 இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iii) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான பிரேரணை
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் போலந்து குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பனவை தவிர்ப்பதற்கும் வரி செலுத்தாது தட்டிக்கழிப்பதனைத் தடுப்பதற்குமாக 2015 ஒற்றோபர் 06 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது)

(மேற்சொன்ன கட்டளைகளும் பிரேரணையும் 2016.01.12 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2016.01.12 அன்று வெளியிடப்பட்ட 1(13) இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2016 ஜனவரி 28 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 "அண்மைக் காலத்தில் காவல்துறையினரின் செயற்பாடு" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை (எதிர்க்கட்சி - மவிமு)
 

2016 ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 06.30 அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கெளரவ ஜோர்ஜ் பெல்பொல மற்றும்
(ii) மறைந்த கெளரவ அப்துல் அஸீஸ்
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom