இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-10-12

2015, ஒக்டோபர் 8ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 ஒக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 26ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள்:-
(ii) உண்ணாட்டரசிறை (திருத்தம்)
(iii) நிதி
(iv) சேர்பெறுமதி வரி (திருத்தம்)
(v) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
(vi) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
(vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்)

(2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 8 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 ஒக்டோபர் 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பதினேழு கட்டளைகள்
(மேற்சொன்ன எட்டு கட்டளைகளுக்குமான பிரேரணைகள் 2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 16 முதல் 23 வரையான விடயங்களாகக் காணப்படுவதுடன் ஏனைய ஒன்பது கட்டளைகளும் 2015.03.25, 2015.04.01, 2015.04.23, 2015.05.05, 2015.06.05, 2015.06.16, 2015.06.29, 2015.07.20 மற்றும் 2015.09.07 ஆம் திகதிகளிலான முறையே 1907/19, 1908/29, 1911/9, 1913/2, 1917/48, 1919/33, 1921/7, 1924/9 மற்றும் 1931/7 இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளவை 2015.10.06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2015.10.09 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1(1) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 14ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள்
(மேற்சொன்ன இரண்டு தீர்மானங்களுக்குமான பிரேரணைகள் 2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 24 மற்றும் 25ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுவதுடன் அடுத்த தீர்மானம் 2015.05.05ஆம் திகதிய 1913/3 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது, 2015.10.06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2015.10.09 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1(1) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது
(இவ்விடயம் 2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom