இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-09-29

2015, செப்டெம்பர் 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஒக்டோபர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 ஒக்டோபர் 06 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது
(இவ்விடயம் 2015.09.23 ஆம் திகதிய 4ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 ஒக்டோபர் 07 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் மீதான விவாதம்:-
(i) உண்ணாட்டரசிறை (திருத்தம்)
(ii) நிதி
(iii) சேர்பெறுமதி வரி (திருத்தம்)
(iv) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
(v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
(vi) தொலைத்தொடர்பு அறவீட்டுத் (திருத்தம்)
(vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்)
(மேற்சொன்ன சட்டமூலங்கள் 2015.09.22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஒக்டோபர் 08 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(2015.02.26 ஆம் திகதிய 1903/39 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மதுவரி அறிவித்தல் (52 ஆம் அத்தியாயம்)
(2015.02.13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள்
(2014.12.02, 2014.12.12, 2014.12.31, 2015.01.22, 2015.02.14, 2015.02.24 மற்றும் 2015.03.17 ஆம் திகதிகளிலான முறையே 1891/8, 1892/39, 1895/11, 1898/43, 1899/32, 1901/28, 1903/4 மற்றும் 1906/7ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iv) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள் (235 ஆம் அத்தியாயம்)
(2015.01.29 மற்றும் 2015.02.26 ஆம் திகதிகளிளான முறையே 1899/33 மற்றும் 1903/40 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(v) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(23 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள 2015.09.25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தைப் பார்க்க)

(மேற்சொன்ன ஒன்பது கட்டளைகள், அறிவித்தல் மற்றும் இரண்டு தீர்மானங்கள் என்பன (i) முதல் (iv) வரையான விடயங்களாக குறித்துக் காட்டப்பட்டுள்ளவை 2015.09.23 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன்மீதான பிரேரணைகள் 23 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள 2015.09.25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 06.30 இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் திருட்டுத்தனமாக நுழைவதலான பிரச்சினை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி - மவிமு)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom